சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்தல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வாட்ஸ்அப், பேஸ்புக், ருவிட்டர் அழைப்புகளை கண்காணிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன எனச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.