புத்தாண்டுக் காலத்தில் மக்களே மிக அவதானம்! – பொலிஸார் அறிவுறுத்தல்

Share

அடுத்த வாரத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், பொது மக்கள் புத்தாண்டுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், மோசடி நடவடிக்கைகளில் மக்கள் சிக்கிக் கொள்வதைத் தடுப்பதற்கும் பொது மக்களின் பாதுகாப்பு கருதியும் பொலிஸாரினால் கீழ்வரும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

பொருட்களை கொள்வனவு செய்கையில் அவை நுகர்வுக்கு பொருத்தமானவையா என்றும் அவற்றின் விலைகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும், அதிக விலைகளில் சிக்க வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் மூலம் போலி ரூபாய் தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதால் அவதானமாக இருக்குமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பிக்பொக்கெட்காரர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும், அவ்வாறான பகுதிகளில் தங்களது சொந்த உடமைகளை பாதுகாப்பாக வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொருள் கொள்வனவுகளுக்கான குழந்தையை அழைத்துச் சென்றால் தங்க நகைகளால் குழந்தைகளுக்கு அலங்காரம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொருட் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிரேஷ்ட பிரஜைகள் சுகாதார காரணங்களுக்காக முககவசங்களை அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்வனவு நடவடிக்கைகளுக்கு தங்கள் தனிப்பட்ட வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துபவர்கள், நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்கள் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் மக்கள் தங்களுடைய தலைக்கவசம் அல்லது உடமைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொருட் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக வீட்டை விட்டு வெகுதூரம் செல்லும் பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரவோ, விளம்பரப்படுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சுற்றுப்பயணங்களில் ஈடுபடும் மக்கள் காலநிலையை அவதானிக்குமாறும், பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சிகளில் குளிப்பது போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர் என்றும் அந்த அறிவுறுத்திலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு