எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பஸ் பயணக் கட்டணத்தைத் திருத்தம் செய்ய முடியும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிசமான அளவு குறையும் பட்சத்தில் ஜூலை மாதம் பஸ் பயணக் கட்டணத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், உதிரிப்பாகங்களின் விலையைக் குறைக்கும் பட்சத்தில், அதன் பலனைப் பயணிகளுக்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.