வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இராணுவத்தினர் சென்ற பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு அருகில் நின்றிருந்த 22 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது யுவதி, கொழும்பு – கண்டி வீதியின் கஜுபுர என்ற பகுதியில் நின்றிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
உயிரிழந்த யுவதி தனது காதலனுடன் சுற்றுலா பயணம் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.