“பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை. எமது கட்சியிலிருந்து எவரும் அரசு பக்கம் செல்லமாட்டார்கள்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய மக்கள் சக்தி பாதுகாப்பாக இருக்கின்றது. எமது கட்சியின் எம்.பிக்கள் அரசுடன் இணையவுள்ளனர் என்று கூறப்படுவது இட்டுக்கட்டப்பட்ட பொய்யாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பலவீனப்படுத்த அரசு முயற்சிக்கின்றது. அதற்காகத்தான் அரச தரப்பினர் எமது கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்கள் எவரும் இந்த அரசில் இணையமாட்டார்கள்.” – என்றார்.