இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

Share

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் ஒதுக்கீடுவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு வாரத்துக்கு கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீட்டில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

* ஓட்டோக்களுக்கு 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும்

* மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும்

* பஸ்களுக்கு 40 லீற்றரில் இருந்து 60 லீற்றராகவும்

* கார்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும்

* லொறிகளுக்கு 50 லீற்றரில் இருந்து 75 லீற்றராகவும்

* வான்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும்

* LAND VEHICLE 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும்

* QUADRICE CYCLE 4 லீற்றரில் இருந்து 6 லீற்றராகவும்

* சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு