ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்குவோம்! – ‘மொட்டு’ திட்டவட்டம்

Share

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்து எங்கள் குழுவில் உள்ளது.

அடுத்த தேர்தல் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அந்த நேரத்தில் நாங்கள் ஒரு கட்சியாக சிறந்த நடவடிக்கைகளை எடுப்போம்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு