பட்டப்பகலில் போதைப்பொருள் விருந்து! – 4 பெண்கள் உட்பட 11 பேர் சிக்கினர்

Share

போதைப்பொருள் விருந்து நிகழ்வைச் சுற்றிவளைத்த பொலிஸார் 11 பேரைக் கைது செய்துள்ளனர்.

கடுவெல – ரணால பகுதியில் இன்று இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 7 ஆண்களும் 4 பெண்களும் என 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6.850 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 28 – 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அத்துருகிரிய, வத்தளை, வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

ஏனையவர்கள் 25 – 44 வயதுடைய ரணால, பியகம, மருதானை, ஹோகந்தர, அதுருகிரிய, வத்தளை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் பாதாள உலகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரான ‘சோரா’ என்பவரும் அடங்குகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு