கிளிநொச்சியில் எரிகாயங்களுடன் வயோதிபரின் சடலம் மீட்பு!

Share

கிளிநொச்சி – பளையில் துப்பரவு செய்யப்பட்ட காணியின் குப்பையை எரித்த 73 வயது முதியவர் ஒருவர் புகைக்குள் அகப்பட்டு மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பளைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரியபளையில் இடம்பெற்றுள்ளது என்று பளைப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த முருகேசு என்னும் முதியவர் புற்கள் நிறைந்து காணப்பட்ட காணியைத் துப்பரவு செய்து சுற்றிவர குப்பையை குவித்து எரித்துள்ளார். அங்கு எழுந்த புகைக்குள் சிக்கிய முதியவர் வெளியேற முடியாமல் வீழ்ந்துள்ளார். இரவாகியும் வீடு திரும்பாததால் அவரைத் தேடிய உறவினர்கள் காலையில் காணிக்குச் சென்று பார்த்தபோது எரிகாயங்களுடன் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலத்தை மீட்ட பொலிஸார் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு