மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெல்மடுல்ல – புலத்வெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பெண் சட்டத்தரணியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பெல்மடுல்ல பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
திருமணமான 40 வயதான துஷ்மந்தி அபேரத்ன என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது என்று சட்டத்தரணியின் குடும்பத்தினர் பெல்மடுல்ல பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். அதையடுத்து சட்டத்தரணியின் கணவர் விசாரணைப் பொறிக்குள் சிக்கியுள்ளார்.
மேலும் உயிரிழந்த சட்டத்தரணி நேற்றுமுன்தினம் இரவு குடும்பத்தாருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஏராளமான பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அங்கு பணியாற்றிய பணிப்பெண், பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.