“அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமா, இல்லையா என்பதை ஜனாதிபதியிடம்தான் கேட்க வேண்டும்.”
– இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையில் முதல் கொடுப்பனவு கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எங்குமே சொல்லவில்லை.
அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று அவர்கள், இவர்கள் எதுவும் சொல்லலாம். யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்.
ஏனெனில் அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம்தான் உண்டு. ஆகவே, அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமா, இல்லையா என்று அவர்தான் சொல்ல வேண்டும்.” – என்றார்.