குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தலவாக்காலை, லிந்துலை – பெர்ஹாம் தோட்டத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்கான இருவர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 72 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் என்று லிந்துலை பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், குளவிக் கொட்டுக்கு இலக்கான மற்றைய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி ஏ.ஜெயராஜன் தெரிவித்தார்.