இலங்கையில் உள்ளவர்களில் மூன்று பேரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தொற்றா சுகாதார இயக்குநரகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார்.
மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், தினமும் உடற்பயிற்சி செய்ய ஒவ்வொருவரையும் ஊக்குவிப்பதன் மூலம் பல நோய்களைத் தடுக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.