“அரசு கொண்டுவரத் தீர்மானித்துள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் (Anti Terrorism Bill) படுபயங்கரமானது.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் அமுலானால் ஜனநாயகம் பற்றி கதைக்க முடியாது. இப்படியான கூட்டங்களை நடத்தும் எம்மைக் கைது செய்யலாம். எனவே, இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் திரள வேண்டும்.” – என்றார்.