பேருவளையில் நில நடுக்கம்! – சுனாமி அச்சுறுத்தலா?

Share

இலங்கையில் இன்றும் ஓர் இடத்தில் நில நடுக்கம் நடுக்கம் பதிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பேருவளைக் கடற்பிராந்தியத்தில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சிறியளவான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பேருவளையில் இருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நில நடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளது.

இதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு