“எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன்.”
– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“குறித்த நேரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது குற்றமாகும்.
இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன்.
தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைக்க முடியாது. தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.” – என்றார்.