“பெருந்தோட்டத் தொழிலாளர்களை எந்தத் தரப்பினரும் ஏறி மிதிக்க முடியாது. அவர்களின் சம்பளக் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்.”
– இவ்வாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரச பெருந்தோட்ட அமைப்பொன்றின் கீழ் இயங்கி, பல வருடகாலம் மூடப்பட்டிருந்த வத்துகாமம் கோமரை தேயிலைத் தொழிற்சாலையை மீளவும் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் வணிக ரீதியான தேயிலை உற்பத்திக்கு, இந்தத் தொழிலாளர்கள் 150 வருடகாலம் பங்களிப்பு வழங்கி வருகிறார்கள். இவர்களுக்கு ஆயிரம் ரூபா நாட் சம்பளம் போதாது என்பதை அரசு உணர்கின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாகவுள்ளேன்.” – என்றார்.