யாழில் நீண்டகாலத் திருடன் வசமாக மாட்டினார்!

Share

யாழ்., வடமராட்சி பிரதேசத்தில் நீண்ட காலமாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகிய நிலையில், நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டு வெற்று சமையல் எரிவாயு கொள்கலன்கள், தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று, இரண்டு பவுண் தங்கச் சங்கிலிகள் இரண்டு ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு