சூட்சுமமான முறையில் ஹொரோயின் விற்பனை! – குடும்பப் பெண் சிக்கினார்

Share

மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 47 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடைப் பிரதேசத்திலேயே குறித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடைப் பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நிபுண கருணாரத்னவுக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பேரில் குறித்த சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரான மேற்படி குடும்பப் பெண் ஹெரோயின் போதைப்பொருளை சிறிய பைக்கற்றுக்களில் அடைத்து மினுவாங்கொடை, பன்சில்கொட மற்றும் கலவான ஆகிய பிரதேசங்களில் மிகவும் சூட்சுமமான முறையில் விற்பனை செய்து வருகின்றார் என்று பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தனது வீட்டில் வைத்து இளைஞர் ஒருவருக்குக் ஹெரோயின் போதைப்பொருள் அடைக்கப்பட்ட பைக்கற் ஒன்றை 1500/= ரூபாவுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கும் போதே பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு