“தொழிற்சங்கத் தலைவர்களை அடக்கும் செயற்பாட்டை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை அரசு சந்திக்க வேண்டி வரும்.”
– இவ்வாறு சுதந்திர மக்கள் சபையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிரான வேட்டையை அரசு உடன் நிறுத்த வேண்டும்.
தேசிய வளத்தைக் காக்க போராடிய தொழிற்சங்கத் தலைவர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமை தவறான முன்னுதாரணமாகும்.
எனவே, தன்னிச்சையாகச் செயற்படுவதை அமைச்சர் கஞ்சன நிறுத்திக்கொள்ள வேண்டும்.” – என்றார்.