பொலிஸ்மா அதிபருக்கு 3 மாத காலம் பதவி நீடிப்பு! – அமைச்சரவை அனுமதி

Share

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பத்திரத்தை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையிலேயே அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 60 வயது நிறைவடையும் நிலையில் அவர் கடந்த மார்ச் 26 ஆம் திகதி ஓய்வுபெற்றுச் செல்லவிருந்தார்.

அந்தவகையில் அவரது சேவையை மேலும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்கவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கிணங்க அவர் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபர் பதவியை வகிப்பார் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு