ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், அடுத்து நடைபெறும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலின் கீழ்தான் அவர் போட்டியிடுவார் எனவும் தெரியவருகின்றது.
விரைவில் நடைபெறும் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளது.
எது எப்படி இருந்தாலும் இது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.