கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்., மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மிஷன் வீதியைச் சேர்ந்த முருகேசு நல்லம்மா (வயது – 74) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
மூதாட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.