உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த நீதிப்பேராணையைப் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய மனுவில் உள்ள தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதையடுத்து, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் மற்றும் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் சார்பில் முன்வைத்த காரணிகளை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மேலதிக காரணிகளை ஆராய எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதியிடப்பட்டுள்ளது.