டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிவாகை சூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.