புதையல் தோண்டும் நோக்கில் வருகை தந்த பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வலப்பனை – கீர்த்திபண்டாரபுர பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து மூன்று புத்தர் சிலைகள், புதையல்,தோண்டப் பயன்படும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றனர்.
வலப்பனை – கீர்த்தி பண்டாரபுர பகுதியிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் திரிந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பொலிஸார் விசாரணை நடத்தியதில், புதையல் தோண்டுவதற்காக வந்ததை ஏற்றுக்கொண்டனர்.
கேகாலையிலிருந்து வருகை தந்த பௌத்த பிக்கு ஒருவர் உட்பட காலி, மீரிகமை, தம்புளை மற்றும் பக்கமுன பிரதேசத்திலிருந்து வருகை தந்தவர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களையும், கைப்பற்றிய பொருட்களையும் வலப்பனை நீதிவான் முன்னிலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.