“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாகச் செயற்படுவார் என்று நம்புகின்றேன். நானும் தற்போது அரசு பக்கம்தான் உள்ளேன்.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
தனது 79 ஆவது பிறந்தநாளையொட்டி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
“நான் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை. ஒதுக்க முற்பட்டாலும் ஒதுங்கமாட்டேன். களனிப் பகுதிக்கு மீண்டும் சேவையாற்ற வேண்டும். மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன்.” – என்றார்.