தப்பிச் செல்ல முற்பட்ட கைதி ஒருவர் ஆற்றில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி, பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதியே மகாவலி ஆற்றில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
குறித்த கைதி ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவராவார்.
கொழும்பு – 15 இல் வசிக்கும் 34 வயதுடைய நபரே தப்பிச் செல்வதற்காக மகாவலி ஆற்றில் குதித்துள்ளார்.
இந்நிலையில், பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து கைதியைத் தேடும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.