நாமல் தொடர்பு விவகாரம்: முஜிபுருக்குக் ஹரின் பகிரங்க சவால்!

Share

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மானுக்குப் பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்குபோது நாமல் ராஜபக்சவுடன் தொடர்பை வைத்திருந்தார் என்றும், அந்தத் தொடர்பின் ஊடாகவே அவர் அரசுடன் இணைந்தார் என்றும் முஜிபுர் ரஹ்மான் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் கூட்டம் இடம்பெறும் போதெல்லாம் ஹரின் பெர்னாண்டோவுக்குத் தொலைபேசி அழைப்புகள் வரும். அவர் கூட்டத்தின் நடுவே எழுந்து வெளியே சென்று பேசிவிட்டு வருவார். அப்படி கோல் எடுத்தவர் நாமல் ராஜபக்ச என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

இதை மறுத்துள்ள ஹரின் பெர்னாண்டோ, அந்தக் காலப்பகுதியில் எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் விபரத்தைத் தருகின்றேன். அதில் நாமல் கோல் எடுத்த விபரம் இருக்கின்றதா என்று சோதித்துப் பார்க்கவும். இதில் முஜிபுர் ரஹ்மான் தோல்வியடைந்தால் உடனடியாக அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு