கொழும்புக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வருபவர்கள் இல்லாததால் சுமார் 10 ஆயிரம் நாட்டாமை மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று நாட்டாமை சங்கத்தின் தலைவர் அனுருத்த கொத்தலாவல தெரிவித்தார்.
இதனால் சில நாட்டாமைகள் வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
“கடந்த இரண்டு வருடங்களில் கொரோனாத் தொற்றின் போது, எந்த வேலையும் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் மிகவும் உதவியற்றவர்களாகவும் இருந்தனர்.
கொழும்பில் 4 ஆயிரம் நாட்டாமைகளும், பேலியகொடையில் 6 ஆயிரம் நாட்டாமைகளும் இருக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை” – என்று நாட்டாமை சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.