பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தனியர் சொகுசு பஸ் நேற்றிரவு 10 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து பயணித்த போது கொழும்பு பிரதான வீதியின் சத்துருக்கொண்டான் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதியதை அடுத்து சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளைக் கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.