கட்டில் தடுப்பில் சிக்கி 7 மாதக் குழந்தை பரிதாப மரணம்!

Share

கட்டிலைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த தடுப்பில் சிக்கிப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஊவாபரணகம, மஸ்பன்ன கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

மஸ்பன்ன வெலேக்கடே வீடொன்றில் வசித்து வந்த ஹர்ஷனி மதுஷிகா என்ற ஏழு மாத பெண் குழந்தையே படுக்கையில் இருந்து வீழ்ந்து தடுப்பில் சிக்கி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்கு அருகில் வந்து பார்த்தபோது, கட்டிலைச் சுற்றியிருந்த தடுப்பில் குழந்தை மாட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவாபரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு