“உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை விரைவில் அழைத்துப் பேச்சு நடத்த எதிர்பார்த்துளோம்.”
– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் நான் கருத்துக் கூற முற்படவில்லை. எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன். விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும்” – என்றார்.