ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக தயாசிறி ஜயசேகர மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்றுப் பணிகளை அவர் ஆரம்பித்தார்.
தயாசிறி ஜயசேகர வெளிநாடு சென்றிருந்த நிலையில், அந்தப் பதவிக்கான பணிகளைக் கவனிக்க சரத் ஏக்கநாயக்கவை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.