உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், ஏப்ரல் 25 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு தினம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்காலத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினர், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது குறித்த தீர்மானங்கள் எட்டப்பட்டன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.