“எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குச் சஜித் பிரேமதாஸ பொருத்தமானவர் அல்லர். அந்தப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம் ஒப்படைக்கவும்.”
– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பணியை சஜித் பிரேமதாஸ சரிவர நிறைவேற்றவில்லை. ஆனால், குமார வெல்கம சிறப்பாகச் செயற்படுகின்றார். எனவே, தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை குமார வெல்கமவிடம் ஒப்படைக்குமாறு நாம் சஜித் பிரேமதாஸவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.