வரித் திருத்தம், கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட சில காரணிகளை முன்வைத்து இன்று ஒருநாள் பணிப்புறக்கணிப்பை நீர் வழங்கல் தொழிற்சங்கக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது.
அதன் இணை ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், நீரேந்து நிலையங்களின் பணிகள் வழமை போல் இயங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.