வவுனியாவில் அரிக்கன் விளக்குடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்பாகத் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்னால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாம் போராட்டம் ஆரம்பிக்கும் போது அரிக்கன் விளக்குகளையே பயன்படுத்தினோம். அதன்பின்னர் எமது போராட்ட இடத்துக்கு மின்சார சபையே மின்சாரம் வழங்கியது. தற்போது மின்சார சபை அதை நிறுத்தியுள்ளது. எமது போராட்டத்தைக் குலைக்க இந்த அரசு அடாத்தாக எம்மைக் கைது செய்தது. ஆனாலும், எமது போராட்டம் தொடரும்.” – என்றனர்.