நல்லிணக்கம் பற்றிய மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் எம்.பி. நியமனம் (Photos)

Share

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டார்.

இவருடைய பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க இதனை வழிமொழிந்தார்.

ஆளும் கட்சி உறுப்பினரால் தனது பெயர் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரினால் வழிமொழியப்பட்டு குழுவின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமையையிட்டுத் தான் மகிழ்ச்சியடைவதாக டிலான் பெரேரா இங்கு குறிப்பிட்டார்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீடுகள் பற்றிய அலுவலகம், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தத் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களைக் குழு முன்னிலையில் கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குழு உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, குலசிங்கம் திலீபன், மயாதுன்ன சிந்தக அமல், கெவிந்து குமாரதுங்க, திருமதி ரஜிகா விக்கிரமசிங்க, எம்.ஏ.சுமந்திரன், இசுரு தொடங்கொட ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு