நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவை, லொயினோன், ஆல்டி தோட்டங்களுக்கு இடையில் செல்லும் ஆற்றிலிருந்து சிசு ஒன்றின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொகவந்தலாவைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.