கடன் பெறத் தலைமை வகித்த ரணிலுக்கு ‘மொட்டு’ வாழ்த்து!

Share

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்குச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மொட்டுக் கட்சி எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகே, கட்சியின் சார்பில் இந்தப் பாராட்டைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் கிடைத்துள்ள நிலையில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடம் இருந்தும் உதவிகள் கிட்டும் என நம்புகின்றோம். அதன்மூலம் நாட்டுப் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கின்றோம்.

மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்று எமக்கு பதவிகள் வழங்கப்பட்டால் ஏற்போம். மாறாக அமைச்சுப் பதவிக்காக நாம் அலைந்து திரியவில்லை.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு