இலங்கைக்கான ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கடனை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தமையை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், கடன் மறுசீரமைப்பு, திறந்த சந்தைகள், நிதி ஒத்துழைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை விரைவாக அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் பொருளாதார ஆற்றலை அடைவதற்கு ஒரு கடினமான பாதை உள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.