இராணுவத்துக்குக் காணியை ஒருபோதும் தாரைவார்க்கோம்! – வடக்கு கல்வி அமைச்சு திட்டவட்டம்

Share

“யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் சிங்கள மகா வித்தியாலயத்துக்குரிய காணி இராணுவத்தினருக்கு வழங்குவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஒருபோதும் இணங்கவில்லை. நீண்டகால கல்வி நடவடிக்கைகளுக்கே அதனைப் பயன்படுத்தவுள்ளோம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“சிங்கள மகா வித்தியாலயக் காணி இராணுவத்தினருக்குக் கையளிக்கப்படவுள்ளது என்று வெளியான செய்தி தவறானது.

குறித்த காணி தமக்குத் தேவை என்று படைத்தரப்பு எமது மாகாணகி கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அந்தப் பாடசாலை தற்போது பாவனையில் இல்லை என்ற பதில் மாத்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பாடசாலைக் காணியை இராணுவத்தினருக்கு கையளிப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதற்கு நீண்ட நடைமுறை காணப்படுகின்றது.

படைத்தரப்புக்கு அந்தக் காணியை வழங்கும் சிந்தனை எம்மிடம் துளியும் இல்லை. நீண்டகால நோக்கில் கற்றல் நடவடிக்கைக்கே அதனைப் பயன்படுத்தவே விரும்புகின்றோம்” என்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு