மக்கள் ஆதரவு ஊடாகவே மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம்! – ‘மொட்டு’ அறிவிப்பு

Share

மக்கள் ஆதரவு மூலமே மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மேலும் கூறியதாவது:-

“மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை எம்மால் இலகுவில் செய்துவிட முடியும். ஆனால், அவ்வாறான எந்தவொரு முயற்சியும் தற்போது இடம்பெறவில்லை.

தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார். அவருடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஜனாதிபதி, பிரதமர் பதவி ஆசையில் திரியும் ஒரு சிலரே இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். மக்கள் ஆதரவு மூலமே மஹிந்தவைப் பிரதமராக்குவோம்” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு