மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, இரத்தோட்டை, வில்கமுவ மற்றும் நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (21) செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி வரை செல்லுபடியாகும் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மேலும் தெரிவித்துள்ளது.