துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு!

Share

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொத்துஹெர – கந்தேவத்த பிரதேசத்தில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கஹவத்த – பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் மொரகொல்ல வத்தை என்ற பகுதியில் தொழிலாளியாகச் சென்றவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகிலுள்ள கந்தேவத்த வனப்பகுதியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு