மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குருநாகல் – கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூவரும் கல்கமுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத குறித்த மாணவன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.