எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறமாட்டாது என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.