உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10 மணிக்கு மேற்படி சந்திப்பை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் சம்பந்தமாகவே இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.