கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயில், கொக்கல பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொக்கல விமானப்படைத் தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாகப் பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையாகப் போராடிய போதும், குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.